வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 24 பிப்ரவரி 2020 (15:28 IST)

கர்ணன் படப்பிடிப்பு தளத்திலிருந்து தாறுமாறான அப்டேட் கொடுத்த தனுஷ்!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வெற்றி நாயகனாக வளம் வந்துகொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் அசுர வெற்றிகொடுத்து 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது. கடைசியாக வெளிவந்த பட்டாஸ் திரைப்படமும் டீசண்டாக கலெக்ஷனை பெற்று கல்லா கட்டியது. 
 
அதையடுத்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் "கர்ணன்" என்ற படத்தில் நடித்து வருகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தில்  யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
 
வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி  வந்த நிலையில் சற்றுமுன் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் "இது கர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மேலும் இதுவரை 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.