1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (18:49 IST)

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ காப்பியா? வைரலாகும் புகைப்படம்

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ காப்பியா?
தனுஷின் 40வது படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியது என்பதும் இந்த படத்திற்கு ’ஜகமே தந்திரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் சற்றுமுன் பார்த்தோம். மேலும் அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் உள்ள ஒரு ஸ்டில் அப்படியே அப்பட்டமான காப்பி என்று சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. டாவின்சி அவர்கள் வரைந்த இயேசு கிறிஸ்துவின் ஓவியம்தான் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு ஸ்டில்லின் காப்பி என்று சமூக வலைதள பயனாளர்கள் ஆதாரத்துடன் பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பல்வேறு விதமாக வெளிநாட்டு திரைப்படங்களை காப்பி அடித்து வரும் நிலையில் தற்போது டாவின்சி ஓவியத்திலும் கை வைத்து விட்டார்களா? என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்