1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (14:05 IST)

துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள் ‘காசேதான் கடவுளடா’ – அப்டேட் கொடுத்த ஜிப்ரான்!

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் டிசம்பர் 9 ஆம் தேதி (நேற்று) இந்த படத்தின் சில்லா சில்லா பாடல் வெளியானது. இந்த பாடல் அஜித் ரசிகர்களையும், பொதுவான ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமானோரால் இந்த பாடல் இணையத்தில் பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான ‘காசேதான் கடவுளடா’ விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதை உறுதி செய்வது போல இசையமைப்பாளர் ஜிப்ரான் தன்னுடைய டிவிட்டர் கணக்கில் “காசேதான் கடவுளடா” என்ற ஹேஷ்டேக்கை பகிர்ந்துள்ளார்.