ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (18:22 IST)

’கேப்டன் மில்லர்’ சிங்கிள் ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு..!

captain miller
தனுஷ் நடித்த கேப்டன் மில்லர்’ என்ற படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். '

தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் கேப்டன் மில்லர்’

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் அறிவித்துள்ளார்

ஜி.வி பிரகாஷ் கம்போஸ் செய்த  கில்லர் கில்லர் கேப்டன் மில்லர் என்ற பாடல் வெளியாகும் என்று தனுஷ் அறிவித்ததை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். இந்த பாடல் நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva