திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (21:51 IST)

தனுஷ்- மாளவிகா மோகனன் நடிக்கும் படம்...மேலும் ஒரு நடிகை ஒப்பந்தம் !

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் ஸ்மிருதி வெங்கட என்ற நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவர் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து சுள்ளான், புதுப்பேட்டை , காதல் கொண்டேன், பொல்லாதவன், அசுரன் என பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.
 

அத்துடன் பாலிவுட்டில் ராஞ்சனா படத்தின் மூலம் அறிமுகமாகி அங்கும் ஹிட் கொடுத்தார். பின்னர் அங்கு தனது இரண்டாவது படமே அமிதாப் பச்சனுடன் " சமிதாப்" என்ற படத்தில் நடித்து புகழ்பெற்றார். தற்போது அத்ரங்கி ரே என்ற இந்தி படத்தில் அக்ஷய் குமாருடன் நடிக்கிறார். இந்த படத்தில் அமீர் கான் மகள் சாரா அலிகான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ள மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன், உங்களுக்கு இணைந்து நடிக்க ஆவலுடன் உள்ளேன் என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதேபோல் தனுஷ் நடிப்பில் துருவங்கள் 16 பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள புதிய படத்தில் தனுஷுக்கான மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது ஹீரோயினாக இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இவர் இதற்கு முன் தடம், மெளன வலை, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.