திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : புதன், 2 அக்டோபர் 2019 (08:29 IST)

தனுஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால் நல்ல ஓபனிங் வசூல் கிடைக்கும் என கூறப்படுகிறது 
 
 
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் பல மாதங்களாக திரையிட முயற்சித்து வரும் நிலையில், ஒவ்வொரு முறை ரிலீஸ் தேதி அறிவித்த போதும் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது
 
 
இந்த நிலையில் தற்போது உறுதியான, இறுதியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் நவம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்றும் இந்த படத்தின் பொருளாதாரப் பிரச்சினையை அனைத்தும் முடிந்துவிட்டதால் நவம்பர் 15ல் கண்டிப்பாக இந்த படம் ரிலீசாகும் என்றும் கௌதம் மேனன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தனுஷ் நடிப்பில் இந்த மாதம் ’அசுரன்’ திரைப்படமும் அடுத்த மாதம் ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படமும், டிசம்பரில் ’பட்டாஸ்’ திரைப்படமும் வெளியாக இருப்பதால் தனுஷ் ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக திரைவிருந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது