புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (19:07 IST)

”ஆர்ட்டிகிள் 15” தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்கவுள்ளாரா??

சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ”ஆர்ட்டிகிள் 15” திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் ஆர்வம் செலுத்தி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடித்து அனுபவ் சின்ஹா இயக்கிய திரைப்படம் “ஆர்ட்டிகிள் 15”. கடந்த மாதம் திரைக்கு வந்த இந்த திரைப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது. சாதி பாகுபாடை குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்த ஆர்ட்டிகிள் 15, இந்தியாவில் ரூ.64 கோடி வசூலை அள்ளியது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய நடிகர் தனுஷ் ஆர்வம் காட்டிவருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ”அந்ததூன்” என்ற ஹிந்தி திரைப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் தற்போது ஆர்ட்டிகிள் 15 திரைப்படத்தை ரீமேக் செய்ய தனுஷ் ஆர்வம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.