செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2019 (12:45 IST)

டி.ஆர் க்காக கேப்டன் போட்ட டிவீட்: தேம்பி துடிக்கும் ரசிகர்கள்...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் டி.ராஜேந்திரன் குறித்து போட்ட டுவீட்டில் ரசிகர்கள் பலர் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
உடல்நலம் பாதித்திருந்த கேப்டன் விஜயகாந்த், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். தேமுதிக என்ற கட்சிக்கு அப்பாற்பட்டு அவரை எல்லா விதமான மக்களுக்கு பிடிக்கும். கேப்டனின் படபடப்பான பேச்சு, எதையும் வெல்லந்தியாக பேசும் மனசு என இவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். தேமுதிகவில் தற்போது இவரது கையை மீறி தான் எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒருபுறம்.
 
அப்படியிருக்க நடிகர் டி.ஆர்.ராஜேந்திர தனது இளைய மகன் குறளரசன் திருமண பத்திரிக்கையை, விஜயகாந்த் வீட்டிற்கு சென்று வைத்தார்.
 
இதுகுறித்து கேப்டன் தனது டிவீட்டில் "இயக்குநர்-இசையமைப்பாளர்-நடிகர்-சகோதரர் விஜய.T. ராஜேந்தர் அவர்கள், எனது இல்லத்தில் மகன் குறளரசன் அவர்களின் திருமண அழைப்பிதழை வழங்கினார். திரையுலகில் இருவரும் இணைந்து பயணித்த நாட்களை நினைவுகூர்ந்தோம். குறளரசன் இல்லறம் சிறக்க எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
 
இதனைப்பார்த்த அவரது ரசிகர்கள் கேப்டனை இப்படி சோகமாக பார்க்க கஷ்டமாக இருப்பதாகவும், விரைவில் மீண்டு வர பிராத்திப்பதாகவும் கூறி வருகின்றனர். ஒரு சிலர் முன்பு இருந்த உடல்நிலை காட்டிலும் தலைவர் கேப்டன் ரொம்ப யூத்தா இருக்காரு கேப்டன் இஸ் பேக் எனவும் சொல்லி வருகின்றனர்.