1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 31 ஜனவரி 2021 (13:59 IST)

நெட்பிளிக்ஸில் உறுதியானது ‘ஜகமே தந்திரம்’

தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நடித்த இன்னொரு படமான ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது
 
கர்ணன் திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்காக நன்றியை தெரிவித்து தனுஷ் வெளியிட்ட அறிக்கையில் ஜகமே தந்திரம் குறித்த ஒரு வார்த்தை கூட அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ்இல் ரிலீஸ் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டதாகவும் இந்த படத்தை நெட்பிளிக்ஸில் ரிலீசாகும் தேதியை முடிவு செய்தபின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் 2 படங்களை ரிலீஸ் செய்யும் தனுஷ், ஒரு திரைப்படத்தை திரையரங்கிலும் இன்னொரு திரைப்படத்தை ஓடிடியிலும் ரிலீஸ் செய்வதால் தனுஷுக்கு பெரிய எதிர்ப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது