கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்… தனுஷ் இணைவது எப்போது?
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி மழைக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்க இருந்த நிலையில் படத்துக்காக போடப்பட்ட செட்-ஐ பார்த்து தனுஷ் அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மீண்டும் செட்டை பிரம்மாண்டமாக போட சொல்லிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது செட் மீண்டும் போடப்பட்டு, ஷூட்டிங் நேற்று முதல் தொடங்கியுள்ளதாம். ஆனால் படத்தின் ஹீரோ தனுஷ் இன்னும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவில்லையாம். விரைவில் அவர் படப்பிடிப்பில் இணைவார் என்று சொல்லப்படுகிறது.