விவாகரத்து பதிவிலுமா ஹேஷ்டேக்… ஏ ஆர் ரஹ்மான் மீது குவியும் விமர்சனங்கள்!
தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர் ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு திடீரென சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். அதில் “தங்களுக்குள் நிரப்ப முடியாத இடைவெளி விழுந்துவிட்டதாக” அவர் கூறியிருந்தார். அவரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இதுபற்றி ரஹ்மான் வெளியிட்டுள்ள பதிவில் “நாங்கள் முப்பதாவது ஆண்டு(முப்பதாவது கல்யாண நாள்) என்ற கனவை அடைய முயன்றோம், ஆனால் சில விஷயங்கள் எதிர்பாராதவிதமாக முடிகின்றன. கூடவே, உடைந்த இதயங்களின் சுமையால் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கலாம். உடைந்த இதயங்கள் மீண்டும் பொருந்தாமல் போனாலும், இந்த சிதைவில் நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம்,. எங்கள் நண்பர்களுக்கு, உங்கள் கருணைக்கு நன்றி, மேலும் இந்த வலுவற்ற காலகட்டத்தை கடக்க எங்கள் தனிமையைக் காத்துக்கொள்ள உதவவும்” எனக் கூறியுள்ளார். இந்த பதிவோடு அவர் “Arrsairabreakup” என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்திருந்தார்.
இந்த ஹேஷ்டேக்கால் இப்போது அவர் விமர்சனங்களை எதிர்கொள்கிறார். விவாகரத்து பதிவில், அதுவும் பிரைவஸி வேண்டும் என சொல்லும் பதிவில் இப்படி ஒரு ஹேஷ்டேக்கை இணைக்கலாமா எனக் கேள்விகளும் விமர்சனங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன.