1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 19 ஜூலை 2018 (21:47 IST)

மீண்டும் அரசியல் கதாபாத்திரத்தை கையில் எடுத்த தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் படத்தில் நடிப்பதோடு அல்லாமல் இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ராஞ்சனா’, ‘‌ஷமிதாப்’ பட நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் தனுஷ் பாலிவுட் படத்தில் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
ராஞ்சனா, ஷமிதாப் படத்துக்குப் பிறகு பலிவுட் பக்கம் போகாமல் இருந்த தனுஷ் தற்போது ‘ரஞ்சனா’ இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். ராஞ்சனா படத்தில் தனுஷ் - சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், அபய் தியோல் நடிப்பில் வெளியான `ராஞ்சனா’ படத்திற்கு ரசிகர்களிடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்றது. எனவே, ‘ராஞ்சனா’ இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
 
ராஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ‘உயிர்த்து எழுவேன்’ எனச் சொல்லி இறந்துபோகும் குந்தன் குமார் ரோல், இரண்டாம் பாகத்தில் உயிர்த்தெழுவது போலவும், காசி நகரில் அரசியல்வாதியாக உருவாவது போலவும் கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். 
 
தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்துக்கு பிறகு ஒரு முழு நீள அரசியல் கதையில் தனுஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.