1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 6 ஜூலை 2018 (21:05 IST)

காலா பட நஷ்டத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் - தனுஷிடம் தாணு போட்ட டீல்

காலா பட நஷ்டத்தை தயாரிப்பாளர் தானு ஏற்றுக்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் வெளியான 3வது நாளிலேயே பல தியேட்டர்கள் காத்து வாங்கியது. எனவே, இப்படம் ஒரு தோல்விப்படம் என சிலரும், இல்லை இது வெற்றிப்படமே என சிலரும் கூறி வந்தனர். 
 
இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் டிஸ்ட்ரிபியூஷன் முறையில்தான் வினியோகஸ்தர்களிடம் கொடுத்துள்ளார். தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமை மட்டும் ரூ.62 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், படத்தை வாங்கியவர்கள், நஷ்டத்தை ஏற்கும்படி தனுஷிடம் வலியுறுத்தியுள்ளனர். எனவே, ரூ.40 கோடி நஷ்டத்தை அவர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.


 
இந்நிலையில், ரூ.40 கோடி நஷ்டத்திற்கு தயாரிப்பாளர் தானு பொறுப்பேற்றுக் கொண்டதாகவும், அதற்கு பிரதிபலனாக அவரின் தயாரிப்பில் நடிகர் தனுஷ் 3 படங்களில் நடித்துக்கொடுக்க வேண்டும் என டீல் பேசப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
எனவே, காலா படத்தை வாங்கி நஷ்டத்தை சந்தித்த வினியோகஸ்தர்களுக்கு தானு தரப்பில் பணம் செட்டில் செய்யப்படும் எனத் தெரிகிறது. வெற்றிப்பட தயாரிப்பாளரான தானுதான், பா. ரஞ்சித் - ரஜினி காம்பினேஷனில் உருவான கபாலி படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.