1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : வியாழன், 28 அக்டோபர் 2021 (14:57 IST)

ஞாபகம் இருக்கிறதா இந்த கதாநாயகியை… பல வருடங்களுக்கு பிறகு வெளியான புகைப்படம்!

கடந்த 2006 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் ஜீவா அவர்களால் இயக்கப்பட்ட திரைப்படம் உன்னாலே உன்னாலே.

வித்தியாசமான கதைக்களம் மற்றும் இளமையான இசையால் இந்த படத்தில் புதுமுகங்கள் நடித்திருந்தாலும் கவனம் பெற்றது. இந்த படத்தில் அறிமுகமான வினய் இப்போது முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படத்தில் அறிமுகமானவரும் நடிகை கஜோலின் தங்கையுமான தனிஷா அதன் பிறகு பெரிய அளவில் வரவில்லை.

இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு இப்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.