1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2023 (10:50 IST)

''புராஜக்ட் கே'' படத்தில் தீபிகா படுகோனின் புதிய போஸ்டர் ரிலீஸ்

deepika padukone
புராஜக்ட் கே படத்தில் தீபிகா படுகோனின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
 

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பிரபாஸ். பான் இந்திய ஸ்டாராக அறியப்படும் இவரது அடுத்த படம் புராஜக்ட் கே.

மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘புராஜெக்ட் கே ‘ படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும்   நடிக்கவுள்ளனர். இவர்களுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஜிமிப்ஸ் வீடியோ அமெரிக்காவில் உள்ள காமிக் கான்  மற்றும் பிரபலமான டைம்ஸ் ஸ்கொயரில் ஆகிய இடங்களில்  ஜூலை 20 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், இந்தியாவில் ஜூலை 21 ஆம் தேதி இந்த ஜிலிம்ப்ஸ் வீடியோ ரிலீஸாகும் எனக் கூறப்படுகிறது.

இந்த  நிலையில், இப்படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனின் போஸ்டர் நேற்று வெளியிடுவதாக பட நிறுவனம் அறிவித்தது. ஆனால், தொழில் நுட்பக் காரணமாக ரிலீஸாகவில்லை.

இந்நிலையில், இன்று புராஜக்ட் கே பட தயாரிப்பு நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் தீபிகா படுகோனின் புதிய போஸ்டரை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.