1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2017 (17:41 IST)

மத்திய அரசு விழாவைப் புறக்கணித்த தீபிகா படுகோனே

‘பத்மாவதி’ படத்தால் தீபிகா படுகோனேவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், மத்திய அரசு விழாவைப் புறக்கணிக்கிறார்.
 
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பத்மாவதி’. இந்தப் படத்தில் ராணி பத்மினியைத் தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, வட இந்தியாவின் சில மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 
இதனால், டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்த படம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சில மாநில அரசுகள், இந்தப் படத்தையே தடை செய்துள்ளன. தீபிகாவின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தன்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார் தீபிகா.
 
வரும் 28ஆம் தேதி, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி துவங்கி வைக்கும் இந்த மாநாட்டில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருந்தார் தீபிகா. தற்போது, தன்னால் கலந்துகொள்ள முடியாத சூழல் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.