புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 11 நவம்பர் 2017 (10:29 IST)

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஒரே ஒரு தமிழ்ப் படம்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, ஒரே ஒரு தமிழ்ப்படம் மட்டுமே தேர்வாகியுள்ளது.

 
கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழா, வரும் 20ஆம் தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில்  திரையிட தெலுங்கில் இருந்து ‘பாகுபலி 2’ படமும், தமிழில் இருந்து ‘மனுசங்கடா’ என்ற படமும் தேர்வாகியிருக்கிறது.
 
‘மனுசங்கடா’ என்ற படத்தை, அம்ஷன் குமார் இயக்கியுள்ளார். தலித் இளைஞன் ஒருவனைப் பற்றிய கதைதான் இந்தப் படம். ஏற்கெனவே மும்பையில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் இந்தப் படம் திரையிடப்பட்டது.
 
அம்ஷன் குமார் இயக்கிய ‘ஒருத்தி’ திரைப்படமும், 2003ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில்  திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.