1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 அக்டோபர் 2021 (10:56 IST)

தமிழ்ப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் தீபக் சஹாரின் தங்கை!

இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் மூலமாக பல படங்களை தயாரித்து வருகிறார்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து உருவாக்கியுள்ள ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் பட தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் ஈடுபடுகிறது. ராக்கி மற்றும் கூழாங்கல் ஆகிய படங்களை வாங்கி வெளியிட உள்ளது. அதே போல நெற்றிக்கண்ணை அடுத்து ஊர்க்குருவி என்ற படத்தை தயாரித்து வருகிறது.

இப்போது வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி என்ற படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் விநாயக் இயக்குகிறார். கிருஷ்ணகுமார் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் தீபக் சஹாரின் தங்கை மால்தி சஹார் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.