வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜூன் 2018 (15:40 IST)

90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்

கனடா நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் 90 வயது முதியவரை திருமணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
கனடா நாட்டைச் சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவரை இளம் பெண்ணான அஸ்லோம் ஜியோனிஸ்ட் என்பவர் காதலித்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் அஸ்லோம் சமீபத்தில் தான் காதலித்து வந்த முதியவரை திருமணம் செய்து கொண்டார். அஸ்லோம் கணவருடன் தான் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
 
காதலுக்கும், காதலிப்பதற்கும் வயது ஒரு தடையில்லை எனக் கூறியுள்ளார் அஸ்லோம். ஆனால் அஸ்லோமை பலர் சமூக வலைதளங்ளில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனங்களை எல்லாம் தான் கண்டுகொள்ளப்போவதில்லை எனவும் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் எனவும் அஸ்லோம் கூறியுள்ளார்.