திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 10 ஜூன் 2018 (14:28 IST)

இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நவீன், இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதாக அவரது முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த நவீன், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது.
 
இந்நிலையில் இவர் கடந்த 2016 ஆண்டு திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் நிகழ்ச்சியில் பங்கேற்று பெயரும் புகழும் கிடைத்தது.

ஆனால் நவீன் தற்பொழுது தனது முதல் திருமணத்தை மறைத்து மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்ய முடிவு செய்து, இன்று அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது.
இதனையறிந்த நவீனின் முதல் மனைவி திவ்யா, தனது திருமண பதிவுச் சான்றிதழை எடுத்துக்கொண்டு சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
இதனையடுத்து நேற்று நவீனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் நவீனை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.