வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (22:43 IST)

முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய பிரபல சினிமா ஒளிப்பதிவாளர்

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இவர் முதல்வர் ஸ்டாலினை பாராட்டியுள்ளார்.

ததமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா, நாயகன், அலைபாயுதே, காதல் தேசம், உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பிசி ஸ்ரீராம்.

இவர் தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் வென்று சாதனை படைத்துள்ளார். தற்போதும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இவர், தன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சமூகம் தொடர்பாக கருத்துகள் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தன் கட்சி அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் பேசி சர்ச்சையானது குறித்து பேசி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,இதுகுறித்து, பிசி.ஸ்ரீராம் தன் டுவிட்டர்  பக்கத்தில்,பொதுவெளியில் பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும். ஸ்டாலின் ஒரு படி முனே சென்று உண்மையைச் சொல்லியுள்ளார். உலகில்  நேரடியாக தொடர்புகொள்ளும் இன்றைய  நாளில்  அவர் தனித்து  உயர்ந்து நிற்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj