1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2023 (19:26 IST)

நடிகர் நாசரின் தந்தை மறைவு...முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

nasar's faher basha
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும்,  தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசரின் தந்தை பாஷா இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

"மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான திரு. நாசர் அவர்களின் தந்தை திரு. பாஷா அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன்.

தந்தையின் மறைவால் வாடும் திரு. நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார்.