தொடர்புடைய செய்திகள்
- தேவர் தங்க கவச பெட்ட வழக்கு.. உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு
- இஸ்லாமிய கைதிகள் விவகாரம்: முதலமைச்சர் பதில் ஏமாற்றமளிப்பதாக தமிமுன் அன்சாரி பேட்டி..!
- திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு வருமான வரித்துறை சம்மன்.. ரெய்டுக்கு பின் அதிரடி..!
- இஸ்லாமியர்கள் மேல் அதிமுகவுக்கு என்ன திடீர் அக்கறை? – மு.க.ஸ்டாலின் கேள்வி!
- மக்களுக்கு இனியும் துரோகம் செய்யக் கூடாது திமுக அரசு -அண்ணாமலை
திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி..!
திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையாத சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆ.ராசாவின் பினாமி எனக்கூறி சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தனது X தளத்தில் பதிவு செய்துள்ளது.
திமுக எம்பி ஆ ராசா பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு செய்துள்ள நிலையில் தற்போது திமுக எம்பி ஆ ராசா அவர்களின் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து திமுக பிரபலங்களை மத்திய அரசு குறிவைப்பது, தேர்தல் நேரத்தில் முடக்குவதற்கா? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர்.
Edited by Siva
