திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2023 (12:56 IST)

இஸ்லாமியர்கள் மேல் அதிமுகவுக்கு என்ன திடீர் அக்கறை? – மு.க.ஸ்டாலின் கேள்வி!

MK Stalin
தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.



கடந்த 1998ம் ஆண்டில் கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பல இஸ்லாமியர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். பலர் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை விடுதலை செய்வது குறித்து இன்று சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி பேசினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க,ஸ்டாலின் “இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து பேசும் அதிமுக 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது கண்ணை மூடிக்கொண்டு இருந்தது ஏன்? இஸ்லாமியர்கள் மீது முன் எப்போது இல்லாத திடீர் அக்கறை இப்போது அதிமுகவிற்கு வந்திருக்கிறது.

உண்மையிலேயே அவர்கள் மேல் அக்கறை இருந்தால் அவர்கள் சார்ந்த கோப்புகள் ஆளுநர் ரவியிடம்தான் பல மாதங்களாக காத்திருக்கிறது. அவருக்கு அழுத்தம் கொடுக்க தயாராக இருக்கிறிர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Edit by Prasanth.K