செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (15:51 IST)

தர்பார் சிறப்புக்காட்சி முதல்பாதி – ’விண்டேஜ் ரஜினிகாந்த்’ என ரசிகர்கள் புல்லரிப்பு !

தர்பார் சிறப்புக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் முதல்பாதி முடிவில் விண்டேஜ் ரஜினிகாந்தை தர்பார் படத்தில் ஏ ஆர் முருகதாஸ் காட்டியிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக ரஜினிகாந்தின் படத்துக்கு இருக்கும் மிகெப்பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் இன்று காலை 5 மணிக்கு சிறப்புக்காட்சியோடு ரிலிஸாகி இருக்கிறது தர்பார் திரைப்படம். இதை ரஜினி ரசிகர்கள் ஆரவாரமான உற்சாகத்தோடு கொண்டாடி திரையரங்குக்கு உள்ளே சென்றுள்ளனர்.

இந்நிலையில் முதல்பாதி முடிந்துள்ள நிலையில் பாதி படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இடைவேளைக் காட்சி அட்டகாசமாக இருப்பதாகவும், முதல் பாதி முழுவதும் பழைய விண்டேஜ் ரஜினியை நமக்குக் காட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.