1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : புதன், 8 ஜனவரி 2020 (14:08 IST)

’தர்பார் ’படம் வெற்றியடைய மண்சோறு சாப்பிடும்’ ரஜினி ரசிகர்கள்’ ...

தர்பார் படம் வெற்றி அடைய வேண்டுமென ரஜினியின் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டும், அலகு குத்தியும்  கோவிலில்  பிரார்த்தனை செய்தனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். இப்படத்தை பிரபல லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. நாளைக்கு வெளியாகும் இப்படத்திற்கு பலத்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
 
இந்நிலையில், ரஜினி ரசிகர்கள் தர்பார் படம் வெற்றியடைய வேண்டி மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலகு குத்தியும், மண் சோறு சாப்பிட்டும் பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான ஷூட்டிங்கில் பங்கேற்றுவிட்டு, ஐதராபாத்தில் இருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச்  சந்தித்தார்.

அப்போது, அவர் வரும் பொங்கலுக்கு அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்.