1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (21:15 IST)

தர்பார் வெற்றிக்காக மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அந்த திரைப்படத்தின் கதை அம்சம், திறமையான திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்பு மற்றும் அந்த திரைப்படம் சொல்லு கருத்து ஆகியவற்றில் தான் இருக்கிறது. இவற்றில் கவனம் செலுத்தினாலே ஒரு திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும். அதை விட்டுவிட்டு ஒரு திரைப்படம் வெற்றிபெற கோவில்களுக்கு செல்வதும் பிரார்த்தனை செய்வதும் வேண்டுதல்களை நிறைவேற்றுவதும் தேவையில்லாத ஒன்று என ஏற்கனவே சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அந்தத் திரைப்படம் வெற்றிபெற வேண்டுமென ரஜினி ரசிகர்கள் அலகு குத்திக் கொண்டும், மண்சோறு சாப்பிடும் வேண்டுதல்களை நிறைவேற்றி உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த செய்கைகளை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்
 
ஒரு திரைப்படத்தை தயாரிக்கும்போது கவனத்துடன் ரசிகர்களை கவரும் வகையில் தயாரித்தால் அந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றும் இது போல் என்ற மூட நம்பிக்கைகளால் எந்த ஒரு திரைப்படமும் வெற்றி பெறாது என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது