செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 30 நவம்பர் 2019 (12:29 IST)

தர்பார் திருவிழா: செகண்ட் சிங்கிள் அப்டேட்ஸ்!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. 
 
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் "சும்மா கிழி" என்ற பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் யூடியூபில் வெளிவந்து நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில்
வலம் வந்துகொண்டிருக்கிறது. அனிருத் மற்றும் எஸ்.பி பாலசுப்ரமணியம் இணைந்து பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறவிருக்கும் செகண்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வரும் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது என்ற செய்தி நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது.