வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (22:09 IST)

தனுஷின் ‘D43’ படத்தின் டைட்டில் என்ன? தனுஷ் டுவீட்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாக இருக்கும் தனுஷின் 43வது படமான ‘D43’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது என்பது தெரிந்ததே. இன்று நடைபெற்ற படப்பிடிப்பில் ஓப்பனிங் பாடலின் படப்பிடிப்பு நடந்தது என்பதும், ஜீவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடலை தனுஷ் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் முடிவாகிவிட்டதாகவும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தனுஷ்  தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்துள்ளார். அனேகமாக பொங்கல் தினத்தில் இந்த படத்தின் டைட்டில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது
 
ஏற்கனவே தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் டீசர், தனுஷ் செல்வராகவன் படத்தின் டீசர் பொங்கல் தினத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது ‘D43’ படத்தின் டைட்டிலும் அதே பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ‘மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.