1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (12:09 IST)

அருள்நிதி பிறந்தநாளில் வெளியான டி-ப்ளாக் போஸ்டர்!

இன்று அருள்நிதியின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்து வரும் டி-ப்ளாக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் டிமாண்டி காலணி, ஆறாது சினம் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென தனி பாணியை கொண்டவர் நடிகர் அருள்நிதி. இன்று அவரது பிறந்தநாளையொட்டி தற்போது அவர் நடித்து வரும் “டி ப்ளாக்” படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை விஜய் குமார் ராஜேந்திரன் எழுதி, இயக்கியுள்ளார். எம்.என்.எம் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அவந்திகா, அருள்நிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார், த்ரில்லர் கதைகளத்தை மையப்படுத்திய இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.