ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2024 (08:20 IST)

கங்குவா பார்த்த எல்லோரும் சொல்லும் ஒரே விமர்சனம்… இதெல்லாம் நியாயமா DSP?

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்துக்காக சூர்யா இந்தியா முழுவதும் பல நகரங்களுக்கு சென்று ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டதால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் அதே நேரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த ஓவர் பில்டப்புகளால் படத்தின் மீது ஒரு சின்ன வெறுப்பும் உருவானது.

இந்நிலையில் படம் நேற்று ரிலீஸாகி பெரும்பாலும் கலவையான விமர்சனங்களையேப் பெற்று வருகிறது. அதில் படம் பார்த்த எல்லா ரசிகர்களுமே சொல்லும் ஒரே விமர்சனமாக இருப்பது படத்தில் இருக்கும் இரைச்சல்தான். படத்தில் கதாபாத்திரங்கள் எல்லாம் ஹை டெசிபலில் கத்திக் கொண்டிருப்பதாகவும், அதைவிட அதிக சத்தத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.