படைகள் பின்வாங்கினாலும் ஆயுத வாகனங்கள் இருக்கே... சீனாவின் ப்ளான் என்ன?
படைகளை பின்வாங்கிய சீனா கனரக ஆயுதங்களுடனான வாகனங்கள் நிறுத்தி வைத்துள்ளது எல்லையில் பதற்றத்தை தனிக்காமல் உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன – இந்திய படைகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு வீரர்களும் பலியானார்கள். சீன ராணுவம் எல்லையில் அத்து மீறியதாலேயே இந்த மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சீனா – இந்தியா இடையே உறவுநிலையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளதுடன், இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளிலும் சீன நிறுவனங்களின் பங்களிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணித்து வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமகா பேசியதோடு சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கையும் விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்று சீனா லடாக் எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெற்றுள்ளன. மோதல் நடைபெற்ற கல்வாண் பகுதி மட்டுமன்றி, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா ஆகிய பகுதிகளிலும் படைகள் ஒன்று முதல் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை பின்வாங்கியுள்ளன.
அதேநேரம், கல்வாண் ஆற்றுப் பகுதியில் சீனாவின் கனரக ஆயுதங்களுடனான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே இதனை இந்திய ராணுவம் லேசாக விடாமல் கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர் என தகவல் தெரிவிக்கின்றது.