அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது - ராமதாஸ், கமல் டூவிட்
கொரோனாவில் கொடூரத்தன்மை இப்போதைக்கு முடியாது என பல நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதனால் இந்தியவில் பிரதமர் மோடி,வரும் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்நிலையில், உலக சுகாதார தலைமைச் செயலர், மருத்துவர் டெட்ராஸ் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதனை டாக்டர் ராம்தாஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளதாவது,
மக்களை வீட்டில் தங்கள் சொல்வதும் பொதுமக்களின் நடமாட்டத்தை தடுத்து நிறுத்துவதும் சுகாதார அமைப்புகள் மீதான் அழுத்தத்தைக் குறைக்கும்,. ஆனால் இந்த நடவடிக்கைகளே கொரோனாவை ஒழித்துவிடாது. மேலும் இரண்டாவது வாய்ப்பு நீங்கள் எவ்வாறுய் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதுதான் இப்போதைய வினா. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை அடையாளம் காணுதல், தனிமைப்படுத்துதல், சோதித்தல், சிகிச்சை, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், ஆகியவை சிறந்த வழிகள் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மநீம கட்சித்தலைவர் கமல், தனது டுவிட்டர் பக்கத்தில்,
வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது என தெரிவித்துள்ளார்.