வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (23:28 IST)

சூப்பர் ஸ்டார் குணமடைய வேண்டும் என வாழ்த்திய ஆர்.ஆர்.அர் பட நடிகர்

சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு குணமடைய வேண்டும் என ஆர்.ஆர்.ஆர் பட நடிகர் ஜூனியர் என் டி ஆர் தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கொரொனா அறிகுறி தென்ப்ட்ட நிலையில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. இவர் தற்போது சர்க்காரு வாரு பட்டா, சிவம் மற்றும் மேஜர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இ ந் நிலையில், இன்று நடிகர் மகேஷ்பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  கொரொனா அறிகுறிகள் உள்ளதால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜூனியர் என்.டி.ஆர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  அண்ணா விரைவில் விரைவில் குணமடைவீர்கள்..எனது வலிமையையும் பிரார்த்தனைகளையும் உங்களுடன் இருப்பதாக எனத் தெரிவித்துள்ளார்.