1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (11:19 IST)

கோப்ரா எப்போதுதான் ரிலீஸ் ஆகும்? தயாரிப்பாளர் எடுத்த முடிவு!

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கோப்ரா படம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பட்ஜெட் 50 கோடிகள் எனப் தயாரிப்பாளருக்கு சொல்லியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆனால் இன்னும் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் 68 கோடி ரூபாய் வரை செலவாகிவிட்டதாம். இன்னும் மீதமுள்ள காட்சிகளை படமாக்க 10 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் இயக்குனர் மேல் பயங்கர கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோப்ரா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு மகான் படத்தில் கவனம் செலுத்தினார் தயாரிப்பாளர் லலித்.

இந்நிலையில் இப்போது மகான் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டதால், இப்போது மீண்டும் கோப்ரா படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த இறுதிகட்ட படப்பிடிப்போடு கோப்ரா மொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளதாம். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில்தான் நடக்கவேண்டும் என இயக்குனர் பிடிவாதமாக இருந்தார். ஆனால் பட்ஜெட் காரணங்களால் சென்னையிலேயே கிரீன் மேட் மூலமாக காட்சிகளை படமாக்குகிறார்களாம்.

இதையடுத்து முழுப் படப்பிடிப்பும் முடிந்ததும் படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் தயாரிப்பாளர் லலித். அதற்கு முன்னால் மகான் திரைப்படம் வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது.