1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (11:03 IST)

ஒரு வழியாக தொடங்கிய கோப்ரா இறுதிகட்டப் படப்பிடிப்பு!

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் பட்ஜெட்டை தாறுமாறாக இயக்குனர் அஜய் ஞானமுத்து ஏற்றிவிட்டதால் தயாரிப்பாளரோடு கருத்து வேறுபாடு எழுந்தது.

கோப்ரா படம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பட்ஜெட் 50கோடிகள் எனப் தயாரிப்பாளருக்கு சொல்லியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆனால் இன்னும் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் 68 கோடி ரூபாய் வரை செலவாகிவிட்டதாம். இன்னும் மீதமுள்ள காட்சிகளை படமாக்க 10 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் இயக்குனர் மேல் பயங்கர கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோப்ரா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு மகான் படத்தில் கவனம் செலுத்தினார் தயாரிப்பாளர் லலித்.

இந்நிலையில் இப்போது மகான் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டதால், இப்போது மீண்டும் கோப்ரா படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த இறுதிகட்ட படப்பிடிப்போடு கோப்ரா மொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளதாம்.