செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (08:08 IST)

குக் வித் கோமாளி சீசன் 2ல் ஐந்து இறுதி போட்டியாளர்கள்: யார் யார்?

குக் வித் கோமாளி சீசன் 2ல் ஐந்து இறுதி போட்டியாளர்கள்: யார் யார்?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த சீஸனில் 5 இறுதிப்போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
 
கடந்த சீசனில் 4 இறுதி போட்டியாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில் இந்த சீசனிலும் அதே போல் நான்கு இறுதிப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
ஏற்கனவே கனி, அஸ்வின் மற்றும் பாபா பாஸ்கர் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள நிலையில் நான்காவது போட்டியாளராக ஷகிலா இணைந்துகொண்டார். நேற்று நடைபெற்ற வைல்ட்கார்ட் போட்டியில் தங்கதுரையை கோமாளியாக வைத்து கொண்டு ஷகிலா வெற்றி பெற்றார்.
 
இதனை அடுத்து செஃப் தாமு ஒரு ட்விஸ்ட் வைத்து இந்த சீசனில் 5 இறுதிப்போட்டியாளர்கள் என்று அறிவித்தார் ஐந்தாவது இறுதி போட்டியாளரை தேர்வு செய்வதற்காக ரித்திகா மற்றும் பவித்ரா இடையே ஒரு போட்டி வைக்கபடவுள்ளதாகவும் தெரிவித்தார்., இந்த போட்டியில் வெற்றி பெற்ற பவித்ரா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து கனி, அஸ்வின். பாபா பாஸ்க.ர் ஷகிலா மற்றும் பவித்ரா இறுதிப்போட்டியில் உள்ள நிலையில் இவர்களில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்பதும் அவர் யாரென்பது வரும் ஞாயிறன்று தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.