வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (17:40 IST)

விஜய் படம் பார்க்க வந்தவரை தடுத்த திரையரங்கு ஊழியர்கள்: ரூ.10,289 அபராதம் விதித்த நீதிமன்றம்!

theater
விஜய் படம் பார்க்க வந்தவரை திரையரங்கு நிர்வாகம் தடுத்த நிலையில் அந்த ரசிகர் நுகர்வோர் கோட்டை நாடிய நிலையில் திரையரங்கு நிர்வாகத்துக்கு நீதிமன்றம் 10,289 ரூபாய் அபராதம் விதித்தது 
 
திருப்பூரில் செல்வவிநாயகம் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்க திரை அரங்கிற்கு வந்தார். அப்போது அவர் டிக்கெட் எடுத்துவிட்டு திரையரங்கிற்கு நுழைய முற்படும்போது செல்வநாயகம் மதுபோதையில் இருப்பதாக கூறி திரையரங்கு நிர்வாகிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர் 
 
இதனை அடுத்து செல்வநாயகம் நுகர்வோர் கோர்ட்டை நாடினார். நான் முறையாக டிக்கெட் எடுத்தும், தன்னை திரையரங்கில் அனுமதிக்கவில்லை என்று அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 
 
இந்த தீர்ப்பில் திருப்பூரில் குடும்பத்துடன் பார்க்க வந்தவரை மதுபோதையில் இருப்பதாக கூறி உள்ளே அனுமதிக்க மறுத்த திரையரங்கிற்கு 10,289 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது