1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (17:36 IST)

சீட் பெல்ட் அணியாவிட்டால் அபராதம்..! – நிதின் கட்கரி தகவல்!

கார்களின் பின் சீட்டில் அமர்ந்திருந்தாலும் சீட் பெல்ட் அவசியமென்றும், அணியாவிட்டால் அபராதம் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மும்பை அருகே நடந்த கார் விபத்தில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ரா உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிவேகமாக சென்றதால் கார் மோதி விபத்து ஏற்பட்டது என்றாலும், அந்த காரில் சைரஸ் மிஸ்திரி சீட்பெல்ட் அணியாமல் சென்றதும் அவர் உயிரிழக்க காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சீட் பெல்ட் குறித்த விவாதங்கள் விழிப்புணர்வுகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்கரி ”விபத்திற்கான காரணம் இன்னது என எந்த கருத்தையும் சொல்வது இப்போது சரியாக இருக்காது. ஆனால் சைரஸ் மிஸ்திரி என் நெரிங்கிய நண்பர். அவரது இழப்பு துரதிர்ஷ்டவசமானது.

பின்சீட்டில் அமர்ந்திருப்பவர்களும் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிமுறை ஏற்கனவே உள்ளது. சீட் பெல்ட் அணியவில்லை என்றால் அலாரம் அடிக்கும் முறை முன் சீட்டுக்கு மட்டும் உள்ளது. இனி கார் தயாரிப்பாளர்களிடம் பின் இருக்கைக்கும் அதை பொருத்த சட்டம் செய்ய வேண்டும். பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.