1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (16:08 IST)

அவகாசம் முடிந்தது: சொத்து விவரங்களை தாக்கல் செய்தாரா நடிகர்?

vishal
பண மோசடி வழக்கில் விஷால் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் இன்று அவகாசம் முடிந்த நிலையில் அவர் மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக 21 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்த நிலையில் இந்த கடனை லைக்கா நிறுவனம் செலுத்தியதாகவும் அதற்கு பதிலாக விஷால் நடிக்கும் படங்களின் ரிலீஸ் உரிமையை லைக்கா நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது
 
ஆனால் விஷால் லைக்கா நிறுவனத்திற்கு எந்த படத்தின் உரிமையை வழங்காததை அடுத்து லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் உடனடியாக 21 கோடி செலுத்தும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என விஷால் கூறிய நிலையில் செப்டம்பர் 9ஆம் தேதி அன்று விஷால் அவரது சொத்து விவரங்களை கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது 
 
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் வேண்டும் என விஷால் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த வழக்கு வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது