1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 26 மே 2021 (18:14 IST)

சிம்புவின் பாடல் நிகழ்த்திய புதிய சாதனை

சிம்பு படப் பாடல் ஒன்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையில் உருவான திரைப்படம் ஈஸ்வரன்.

இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையொட்டி ரிலீசாகி பெரும் வரவேற்பைப் பெற்றது., வந்தா ராஜாவா வருவேன் என்ற படத்திற்குப் பிறகு சிம்புவின் திறமையை நிரூபித்த படம் இது.

இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆகின. ரசிகர்களும் இப்படத்தில் தமன் இசையமைத்த பாடல்களை டிரெண்டிங் செய்தனர்.

இந்நிலையில், ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்ற  Mangalyam என்ற பாடல் யூடியூப் தளத்தில் சுமார் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதை சிம்புவின் ரசிகர்களும் ஈஸ்வரன் படக்குழுவினரும் இணைந்து சமூக வலைதளத்தில் #100MviewsforMangalyam என்ற ஹேஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.