காமெடில நீங்க எப்பவும் 'கிங்- வடிவேலுவை பாராட்டிய இயக்குநர்

sinoj| Last Modified திங்கள், 13 செப்டம்பர் 2021 (18:22 IST)
 

நேற்று காமெடி நடிகர் வடிவேலு தனது பிறந்தநாள் கொண்டாடினார். இதுகுறித்து பிரபல இயக்குநர் சேரன் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

நீண்டநாட்களாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் தடை விதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு, அவருக்கான தடை நீக்கப்பட்டு நாய் சேகர் என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை சுராஜ் இயக்கவுள்ளார்.

இந்நிலையில், நேற்று வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு பலரும் பாராட்டுகள் அவருக்குப் பாராட்டுகள் தெரிவித்தார்.  இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில், அதில்,  பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா..  நம்பர் 6, விவேகானந்தர் தெரு,  துபாய் குறுக்குச்சந்துல  இருந்து பேசுறேன்..

நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா..  காமெடில நீங்க எப்பவும் 'கிங்'.. #HBDVadivelu எனத் தெரிவித்துள்ளார்.  இதில் மேலும் படிக்கவும் :