வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 19 ஜூலை 2023 (13:35 IST)

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' பட 2 வது சிங்கில் #HisNameIsJohn ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் பாராட்டு

Dhuruva Natchathiram
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் 2 வது ரிலீஸ் ஆகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். இப்படத்தில் இயகுனர் மற்றும் ஹீரோ விக்ரமுக்கும் இடையே சில மனஸ்தாபம் ஏற்பட்டது.

அதன்பின் இருவரும் இப்படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நட்த்தியதை அடுத்து,  மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தகவல் வெளியானது.

மின்னலே, வாரணம் ஆயிரம், பச்சைக்கிளி முத்துச்சரம்,காக்க காக்க, என்னை அறிந்தால் ஆகிய படங்களை தொடர்ந்து, கெளதம்- ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் இணைந்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்தில், இப்படத்தின் முதல் சிங்கில் ஒருமனம் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது இப்படத்தின் 2 வது சிங்கில் His Name Is John என்ற பாடலை படக்குழு ரிலீஸ் செய்துள்ளனர்.

இப்பாடலை தாமரை எழுதியுள்ளார். இப்பாடல் பற்றி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சில  நேரங்களில் காத்திருப்பதன் மதிப்பு இதுதான் என்று இப்பாடலைப் பாராட்டி, இந்தப் பாடலை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெரிவித்துள்ளார்.

இப்பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.