1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (11:50 IST)

பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல்? குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை! - ரசிகர்கள் ஷாக்!

பிரபலமான டிவி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’யிலிருந்து விலகுவதாக அதன் தொகுப்பாளினி மணிமேகலை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி சமையல் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பல சீசன்களாக கோமாளியாக பங்கேற்று நகைச்சுவை செய்து வந்தவர் மணிமேகலை. இந்த சீசனில் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக செயல்பட்டு வந்தார்.

 

இந்நிலையில் இந்த சீசனில் சமையல் செய்ய போட்டியாளராக வந்த விஜய் டிவியின் மற்றொரு தொகுப்பாளினியான பிரியங்காவுக்கும், மணிமேகலைக்கும் இடையே நிகழ்ச்சியில் மோதல் எழுந்துள்ளதாக தெரிகிறது. அதை தொடர்ந்து தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், பிரியங்காவின் பெயரை குறிப்பிடாவிட்டாலும், போட்டியாளராக நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சக தொகுப்பாளினி, தனது தொகுப்பாளர் பணியை செய்யவிடாமல் இடையூறு விளைவிப்பதாகவும், சுயமரியாதையை மீறும் வகையில் நடந்து கொள்வதாகவும், அதனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாகவும் கூறியுள்ளார். இது குக் வித் கோமாளி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K