தயாரிப்பாளர்களை கதறவிடுகிறார் வடிவேலு என புகார் எழுந்துள்ளது. ஆம், வடிவேலு - சிம்புதேவன் ஷங்கர் கூட்டணியில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய பெரிய வெற்றி படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி.
தற்போது இந்த படத்தின் 2 ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பு துவங்கிய 8 நாட்கள் சென்ற நிலையில் வடிவேலு படக்குழுவினரிடம் கோபம் கொண்டு படப்பிடிப்பை புறக்கணித்து விட்டார்.
ஆடை வடிவமைப்பாளரில் தொடங்கிய சிக்கல் வடிவேலுக்கு நடிக்க தடை விதிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. தயாரிப்பாளர் சங்கர் வடிவேலுவால் தனக்கு ரூ.9 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், விஷால் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொடக்கத்தில் பிடி கொடுக்காமல் பேசிய வடிவேலு இப்போது மேலும் ரூ.2 கோடி கொடுத்தால் படத்தில் நடிக்க தயார் என்று கூறி இருக்கிறார்.