அஜித் பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து

ajith
Last Updated: செவ்வாய், 1 மே 2018 (13:20 IST)
நடிகர் அஜித்தின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு இன்னல்கலையும் தடைகளையும், தோல்வியையும் தாண்டி சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் தல அஜித். அவர் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
 
இந்நிலையில் அவருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நல்ல ஆரோக்கியத்துடனும், வளத்துடனும் வாழ ராகவேந்திரா சாமியை பிரார்த்திக்கின்றேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
 
மேலும் நடிகர்கள் சதீஷ், இசையமைப்பாளர் இமான். இயக்குனர் விக்னேஷ் ஷிவன், சுசீன்ந்தரன், வெங்கடேஷ், மனோபாலா, தனுஷ் நிவின் பாலி, நடிகை ஹன்சிகா ஆகியோர்  பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இதனால் டிவிட்டரில் #HBDThalaAjith என்ற ஹேஷ்டேக், டிரெண்டாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :