விசுவாசம்' படப்பிடிப்பு தொடங்கும் தேதி: அஜித் ரசிகர்கள் உற்சாகம்
அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதமே தொடங்கவிருந்த நிலையில் திடீரென கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஸ்டிரைக் முடிவுக்கு வந்து படப்பிடிப்புகளும் தொடங்கிவிட்டன. அதேபோல் புதிய படங்களின் ரிலீஸ் தேதிகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அஜித் நடிக்கும் விசுவாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 4ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாள் வரவுள்ளதை அடுத்து பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பின்னர் அஜித், படப்பிடிப்புக்கு கிளம்பவுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித், நயன்தாரா, யோகிபாபு , தம்பி ராமையா, உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.