திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (15:35 IST)

வாழ்த்து மழையில் நனைந்து வரும் டிடி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் நடனம் ஆடிய டிடிக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
விஜய் டிவியில் பல வருடங்களாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வருகிறார் டிடி. இவர் கடைசியாகத் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ‘அன்புடன் டிடி’. கடந்த வருடமே இந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டது. அதன்பிறகு எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காத டிடி, சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘என்கிட்ட மோதாதே’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
 
இந்த நிகழ்ச்சியில் டிடி நடனம் ஆடியுள்ளார். அவர் நடனம் ஆடிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பிரபலங்கள் நீயாநானா கோபிநாத், உமா ஆகியோர் அவரை வாழ்த்தியுள்ளனர்.