1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 30 நவம்பர் 2019 (15:15 IST)

வெரைட்டி ஆஃப் "சும்மா கிழி" வெர்சன்: வடிவேலு தான் மாஸ் - வீடியோ!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. 
 
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் "சும்மா கிழி" என்ற பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் யூடியூபில் ரிலீஸானது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகிய இப்பாடலை அனிருத் மற்றும் எஸ்.பி இணைந்து பாடியிருந்தனர். இப்பாடல் வெளியான ஒரு சில மணி நேரங்களில் யூடியூபில் நம்பர் ஒன்  இடத்தை பிடித்தது. அதே சமயத்தில் இப்பாடல்  அண்ணாமலை, வைகாசி பிறந்தாச்சு உள்ளிட்ட படங்களின் பாடல் சாயலில் இருப்பதாக கூறி ட்ரோல் செய்து வந்தனர். 
 
இந்நிலையில் தற்போது "சும்மா கிழி" பாடலுக்கு பல விதமான வெர்சனில் பாடல்களை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக தோனி, யுவராஜ் சிங், வடிவேலு உள்ளிட்டவர்களின் வெர்ஷன்கள் இணையத்தை கலக்கி வருகிறது. அதில் முக்கியமாக வடிவேலு வெர்ஷன் பட்டய கிளப்பி வருகிறது. 

யுவராஜ் சிங் வெர்ஷன் வீடியோ


தோனி வெர்ஷன் வீடியோ


வடிவேலு வெர்ஷன் வீடியோ