1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (10:00 IST)

விக்ரம் 62 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது? இயக்குனர் தகவல்!

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தனது நடிப்புத் திறனால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் விக்ரம். யாராலும் நடிக்க முடியாத பல கடினமான கதாப்பாத்திரங்களை கூட எடுத்து செய்யும் இவரின் ஆர்வத்திற்கு அந்நியன், பிதாமகன், சேது போன்ற படங்கள் நல்ல தீனியாய் அமைந்தன.

பின்னர் பல கெட்டப்புகளில் விக்ரம் பல படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை.  கடைசியாய் அவர் நடித்த்ருந்த கோப்ரா உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவின. இந்நிலையில் தற்போது பா.ரஞ்சித் உடன் விக்ரம் இணைந்துள்ள தங்கலான் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விக்ரம் சித்தா படத்தை இயக்கிய இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருதாகவும், அடுத்த அனடு மார்ச் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் இயக்குனர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.